திம்பம் மலைப்பாதையில் 50 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து

 
ச்

சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் 50 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளனது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை ஆனது 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. தமிழ்நாடு கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களை இணைக்க கூடிய முக்கிய மலைப்பாதையாக உள்ளது.இந்த நிலையில் திம்பம் மலைப்பாதையில் 25வது கொண்டை ஊசி வளைவில் மக்காசோள பாரம் ஏற்றி வந்த லாரி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கர்நாடக மாநிலத்தில் இருந்து பல்லடம் நோக்கி மக்காசோள பாரம் ஏற்றி சென்ற லாரி 25-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பிய போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் ரவிக்குமார் (46) மற்றும் கிளீனர் ரவிக்குமார் (24) ஆகிய இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், சிறிய காயங்களுடன் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற ஆசனூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வாகனத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விதிமுறைகளை மீறி அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களால் தொடர் விபத்துகள் ஏற்படுவதாகவும், அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களை வன சோதனை சாவடி ஊழியர்கள் நீதிமன்ற உத்தரவை மீறி அனுப்பதிப்பதாகவும் குற்றச்சாட்டியுள்ளனர்.