46 முதலீட்டுத் திட்டங்களுக்கு ஊக்கச்சலுகைகள் வழங்க அமைச்சரவை ஒப்புதல்
Feb 23, 2026, 21:08 IST1771861130264
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்தது.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்தது. ரூ.5,000 வரவு வைக்கப்பட்டதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இன்று(பிப்.23) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தமிழ்நாட்டில் புதிதாக நிறுவப்படவுள்ள மற்றும் விரிவாக்கம் மேற்கொள்ளப்படவுள்ள 46 முதலீட்டுத் திட்டங்களுக்கு ஊக்கச்சலுகைகள் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களுக்காக ரூ.39,592.39 கோடி ஒதுக்கீடு மேற்கொள்ள உறுதியளிக்கப்பட்டுள்ளதுடன் 61,521 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது.

