கீழக்கரை ஜல்லிக்கட்டில் அபிசித்தர் முதலிடம்!

 
அபிசித்தர்

மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டிய 10 காளைகளை அடக்கிய அபிசித்தர் முதலிடம் பெற்று அசத்தியுள்ளார்.

Image

ஜல்லிக்கட்டுக்கு உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் அருகே பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து கீழக்கரை கிராமத்தில், வகுத்துமலை அடிவாரத்தில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்பட்டது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். திறப்பு விழாவை முன்னிட்டு இன்று அந்த அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விமரிசையாக நடைபெற்றன.


இந்நிலையில் மதுரை கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் இன்று நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 10 காளைகளை அடக்கி பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் முதலிடம் பிடித்துள்ளார். முதலிடம் பிடிக்கும் காளை உரிமையாளர் மற்றும் மாடுபிடி வீரருக்கு `தார் SUV' உடன் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. விளாங்குடியை சேர்ந்த பரத்குமார், சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசன் ஆகியோர் தலா 6 காளைகளை 2வது இடம் பெற்றனர்.