கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள ‘துள்ளுவதோ இளமை’ நடிகர்- உதவி செய்யுமாறு வேண்டுகோள்

 
ச்

'துள்ளுவதோ இளமை‘ திரைப்படத்தில் நடித்த நடிகர் அபிநய் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

Image

துள்ளுவதோ இளமை படத்தில் நடித்தவர் நடிகர் அபிநவ் (43). அதுமட்டுமின்றி, ஜங்சன், தாஸ், என்றென்றும் புன்னகை உட்பட பல படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமல்ல துப்பாக்கி மற்றும் அஞ்சானில் Vidyut Jammwal க்கு குரல் கொடுத்தவர், பையா படத்தில் வில்லனுக்கும், காக்கா முட்டையில் பாபு ஆண்டனிக்கும் கூட குரல் இவர் தான். பல்வேறு முன்னணி விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.


 


இந்நிலையில் நடிகர் அபிநவ் லிவர் சிரோசிஸ் நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய அவருக்கு 
மேல் சிகிச்சைக்கு 28 லட்சம் ரூபாய் தேவைப்படுவதால் உதவி செய்யுமாறு உருக்கமுடன் வீடியோ வெளியிட்டு கோரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே ரூ.15 லட்சத்துக்கு மேல் செலவு செய்து சிகிச்சை பெற்றுள்ளார்.