இன்று முதல் எங்கள் போராட்டம் ஆரம்பம் : அபிஜித் தீப்கே அறிவிப்பு..!

 
11

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் செயல்பட்டு வருகிறார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த நடவடிக்கைக்கு இரு தேர்தல் ஆணையர்கள் பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சட்டத்துக்கு புறம்பாக தன்னிச்சையாக செயல்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே, கரப்பான்பூச்சி ஜனதா கட்சித் தலைவர் அபிஜித் தீப்கே, அடுத்த 48 மணிநேரத்தில் ஞானேஷ் குமார் பதவி விலகவில்லை என்றால் போராட்டம் நடத்தப் போவதாக நேற்று முன்தினம்  (புதன்கிழமை) அறிவித்திருந்தார்.

அவர் பதவி விலகாத பட்சத்தில், காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ம் தேதி அதாவது இன்று முதல் மும்பையில் தொடக்க கட்டப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து, இந்த போராட்டத்தை நாடு முழுவதும் தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையின் புகழ்பெற்ற மரைன் டிரைவ் (Marine Drive) பகுதியில் போஸ்டர்களுடன் காணப்பட்ட சிஜேபி (CJP) அமைப்பின் நிறுவனரான அபிஜீத் திப்கேவை, மும்பை காவல்துறை சிறிது நேரம் சிறைபிடித்து விசாரணை நடத்தியது.