ஓராண்டில் ஆவின் பால் விற்பனை 7% அதிகரிப்பு
Updated: Aug 31, 2023, 10:35 IST1693458308042

ஆவின் பால் விற்பனை ஓராண்டில் 7% அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தின் மூலம் தரமான பொருட்களை குறைந்த விலையில் மக்களுக்கு பயன்தரும் வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 25 லிட்டர் லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் மட்டும் 13 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், ஐந்து லட்சம் பேர் ஆவின் அட்டைதாரர்கள் ஆக இதில் பங்கெடுத்துள்ளனர்.
ஆவின் நிறுவனத்தினால் பால் மட்டுமின்றி, குலாப்ஜாமுன் ,பால்கோவா, ஐஸ்கிரீம் ,நெய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் ,கடந்த சில மாதங்களுக்கு முன்பு நூடுல்ஸ் ,மில்க் கேக், பாயாசம் மிக்ஸ், யோகர்ட் ட்ரிங்ஸ் உள்ளிட்டவையும் ஆறிமுகப்படுத்தப்பட்டது.