ஆவின் பொருட்களின் விலையேற்றம் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!!

 
tn

ஆவின் நிறுவனம் அறிவித்துள்ள விலையேற்றத்தை ஏழை , எளிய மக்களின் நலன் கருதி உடனே திரும்பபெற வேண்டும் என்று ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசின் ஆவின் நிறுவனம் , நெய் , தயிர் மற்றும் பல்வேறு பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது.

gk

கடந்த மார்ச் மாதம் தான் ஆவின் நிறுவனம் ஆவின் பொருட்களுக்கு விலையேற்றம் செய்தது . ஆனால் குறுகிய காலத்திற்குள் மேலும் விலையேற்றத்தை அறிவித்துள்ளது ஏழை , எளிய மக்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது . ஏழை . எளிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் , அத்தியாவசிய பொருட்களாக இருக்கும் தயிர் மற்றும் நெய்யின் விலை ரூ .5 ல் இருந்து ரூ .45 வரை உயர்த்தியுள்ளது மக்களை மிகுந்த சிரமத்திற்குள்ளாக்கி இருக்கிறது.

tn

பொருளாதார ரீதியில் இவ்வேளையில் தமிழக அரசு , பால் பொருட்களின் மின்கட்டணத்தை உயர்த்தியும் ஏழை மக்கள் மீது விலையேற்றியும் , மென்மேலும் சுமையை ஏற்றுகிறது . சிரமப்படும் அரசு நிறுவனமான ஆவினே விலையேற்றும் செய்யும் பொழுது தனியார் நிறுவனங்களும் , அவர்களது பொருட்களுக்கு பொருட்களுக்கு மேலும் விலையேற்றம் செய்ய மிகுந்த வாய்ப்புள்ளது .  எனவே ஏழை , எளிய மக்களின் நலன் கருதி ஆவின் நிறுவனம் அறிவித்த விலையேற்றத்தை உடனடியாக திரும்ப பெறவேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.