நெய் டப்பாக்களை பதுக்கிய ஆவின் துணை பொது மேலாளர் பணியிடை நீக்கம்!

 
நெய் டப்பாக்களை பதுக்கிய ஆவின் துணை பொது மேலாளர் பணியிடை நீக்கம்!

சேலத்தில் ஆய்வின்போது நெய் டப்பாக்களை பதுக்கிய ஆவின் துணை பொது மேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

சேலத்தில் ஆவின் துணை பொது மேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நெய் டப்பாக்களை மறைத்து வைத்த விவகாரத்தில் சேலம் ஆவின் துணை பொது மேலாளர் சாரதா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆய்வின்போது சாரதா ஆவினில் இருந்த 40 லிட்டர் நெய் டப்பாக்களை தனது மேஜை டிராயரில் பதுக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகள் நடத்திய ஆய்வின்போது மறைத்து வைத்திருந்த 40 லிட்டர் நெய் டப்பாக்கள் சிக்கின.