ஆடி கிருத்திகை: வெறிச்சோடிய காசிமேடு சந்தை..!!

 
ஆடி கிருத்திகை: வெறிச்சோடிய் கேசிமேடு சந்தை..!! ஆடி கிருத்திகை: வெறிச்சோடிய் கேசிமேடு சந்தை..!!


ஆடி மாதம்  முதல் வார ஞாயிற்றுக்கிழமையான இன்று  கிருத்திகை விரதம் என்பதால், காசிமேடு சந்தை வெறிச்சோடி காணப்படுகிறது. மீன்களின் விலையும்  உயர்ந்துள்ளது.  

வார விடுமுறை நாட்கள் என்றாலே வழக்கமாக காசிமேடு மீன் சந்தை மக்கள் வெள்ளத்தில் களைகட்டியிருக்கும். அதிலும்  ஆடி மாதம் முதல் வாரத்தில் காசிமேடு திருவிழா போன்று காட்சியளிக்கும். ஏனெனில் ஆடி மாதத்தில் பெரும்பாலான அம்மன் கோயில்களில்  திருவிழாக்கள் நடைபெறும். அத்துடன் வீடுகளில் கூழ்வார்த்து அம்மனுக்கு படையலிட்டு வழிபடுவது வழக்கம். இந்த அம்மன்  படையல்களில் மீன் உணவுக்கு முக்கிய இடமுண்டு/ ஆகையால் ஆடி மாதம் மீன்கள் விற்பனை அதிகமாகவே இருக்கும்.  

காசிமேடு சந்தையில் களைகட்டிய மீன் விற்பனை..

ஆனால்  இன்று ஆடி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை கிருத்திகை விரதம் கடைபிடிப்பதனால் காசிமேடு  வெறிச்சோடி காணப்படுகின்றன. அத்துடன் இந்த வாரம் மீன்களின் வரத்தும் குறைவாக இருப்பதாக மீனவர்கள் கூறுகின்றனர். வரத்து குறைவால்  மீன்களின் விலையும் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.  வஞ்சிரம், பாறை, வவ்வால் உள்ளிட்ட மீன்களின் விலையும் அதிகரித்துள்ளது.