புலன் விசாரணை நடந்து வருவதால் உடலை கொண்டுவருவதில் தாமதம் - ஆதவ் அர்ஜூனா..!

 
1

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டு கவன ஈர்ப்பு தீர்மானங்களை அவை முன்பு கொண்டு வந்தார். முதலாவது, மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 4 மீனவர்கள் சவுதியில் அரபியாவில் தங்கி மீன் பிடிக்கும் வேலை செய்து வந்தனர். தமிழக மீனவர்கள் ஈரானிய கடற் கொள்ளையர்களால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துவிட்டார். 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்பதை முன்வைத்தார்.

அடுத்ததாக, சென்னை காசிமேடு துறைமுகத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் ஆந்திர கடற்பகுதியில் மீன் பிடிக்கக்கூடாது எனக் கூறி ஆந்திரா அதிகாரிகள் 8 விசைப்படகுகளை பறிமுதல் செய்ததோடு, 80 மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பதை முன்வைத்து, இந்த பிரச்சினைகள் குறித்து அவையில் விவாதிக்க வேண்டுமென்று தெரிவித்தார்.

சவுதியில் தமிழக மீனவர்கள் ஈரானிய கடல் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் மீது அரசின் நடவடிக்கை குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் சிவகுமார் மற்றும் தளி ராமச்சந்திரன் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “மயிலாடுதுறையை சேர்ந்த மாவீரன், சங்கர், பால்ராஜ், மணிகண்டன் ஆகியோர் கடந்த மே மற்றும் ஜூலை மாதங்களில் மீன்பிடி தொழிலுக்காக சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளனர். அவர்கள் அங்கு மீன்பிடிக்க சென்றபோது, கடற்கொள்ளையர்கள் தாக்கியதால், தங்களை தற்காத்துக்கொள்ளும் பொருட்டு கடற்கொள்ளையர்களை தடுக்க முயன்றுள்ளனர். அப்போது கொள்ளையர்கள் மீனவர்களை சுட்டனர். இதில் மாவீரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக புலன் விசாரணை நடைபெற்று வருவதால் இறந்த மாவீரனின் உடலை இந்தியாவிற்கு அனுப்ப கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இறந்தவரின் உடலை தமிழ்நாட்டிற்கு கொண்டு வர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும் மீன்வளத்துறை அமைச்சர் இறந்தவர்களின் உடலையும் காயமடைந்தவர்களையும் தமிழகத்திற்கு கொண்டு வருவதற்காக தூதரக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்” என்று பதிலளித்தார்.