'ஒரே நாடு ஒரே தேர்தல்'- ஜனநாயகத்திற்கே ஆபத்து: ஆதவ் அர்ஜூனா

 
ஆதவ் அர்ஜூனா

ஒரே இடத்தில் அனைத்து அதிகாரங்களையும் குவிக்கும் நோக்கத்தோடு முன்னெடுக்கப்படும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறை ஜனநாயகத்திற்கே ஆபத்தாக முடியும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். 

Aadhav Arjuna:`வீணான விவாதங்களுக்கு வழிவகுக்கக்கூடாது என..' -  வி.சி.க-விலிருந்து விலகிய ஆதவ் அர்ஜூனா | aadhav arjuna lefts from vck -  Vikatan

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியா என்பது கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையிலான நாடு. குறிப்பாக, மாநிலங்களில் சுயாட்சி என்பதே இந்திய அரசியலின் முதுகெலும்பு. ஆனால், முன்னெப்போதையும் விட  தற்போது அனைத்து அதிகாரங்களும் டெல்லியை நோக்கிக் குவிக்கப்படுவது நமது அரசியல் சாரத்திற்கே எதிரானது. அமெரிக்கா போன்ற ஜனநாயகத்தில் மேம்பட்ட வளர்ந்த நாடுகள் பலவும் கூட்டாட்சி நடைமுறையை வலிமையாக கடைப்பிடிக்கிறார்கள். அதிகாரங்கள் அனைத்தும் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுவதன் மூலம் மக்கள் நல்வாழ்வை உறுதிப்படுத்துகிறார்கள். 


ஆனால், உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று சொல்லப்படும் இந்தியாவில் நிலைமை நேரெதிராக சென்றுகொண்டிருக்கிறது. அந்தவகையில், ஒரே இடத்தில் அனைத்து அதிகாரங்களையும் குவிக்கும் நோக்கத்தோடு முன்னெடுக்கப்படும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறை ஜனநாயகத்திற்கே ஆபத்தாக முடியும். எனவே, இந்த முறையை எதிர்த்து நாடாளுமன்றத்தில் பேசிவரும் அனைத்து எம்பி-க்களின் வாதங்களோடு மக்களாகிய நமது குரலும் ஓங்கி ஒலிக்க வேண்டும்.

'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறையை எதிர்ப்போம்! ஜனநாயகம் காப்போம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.