வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனா பின்னடைவு- திமுக வேட்பாளர் முன்னிலை
வில்லிவாக்கத்தில் தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா பின்னடைவை சந்தித்துள்ளார்.
சென்னையில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் பிரதான போட்டியாக களம் காணும் தொகுதிகளில் ஒன்றாக வில்லிவாக்கம் மாறியது. காரணம்
தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா போட்டியிடுகிறார். இவருக்கு போட்டியாக திமுக சார்பில் கார்த்திக் மோகன் களம் காண்கிறார். இவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் நெருங்கிய நண்பராவார். கார்த்திக் மோகனுக்காக சபரீசனே களத்தில் இறங்கி வாக்கு சேகரித்தார். அதிமுக சார்பில் எஸ்.ஆர்.விஜயகுமார் போட்டியிடுகிறார். எனவே இந்த தொகுதியை பொறுத்தவரை மும்முனைப் போட்டியாக மாறியது.
இந்நிலையில் வில்லிவாக்கத்தில் தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா பின்னடைவை சந்தித்துள்ளார். திமுக வேட்பாஅர்
291 வாக்குகளை பெற்று கார்த்திக் மோகன் முன்னிலையில் உள்ளார்.

