"தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்"- ஆதவ் அர்ஜூனா
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த திமுகவுக்கு நன்றி என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறினார்.
சட்டமன்றத்தில் உலகளவில் இருபெரும் ஜனநாயகம் உள்ளன; ஒன்று அமெரிக்கா, மற்றொன்று இந்தியா.. அமெரிக்காவில் மக்கள் தொகை அதிகரித்தாலும் எம்பிக்கள் எண்ணிக்கை மாறவில்லை.." ஏனிந்த அவசரம் என்ற பாஜகவின் கேள்விக்கு பதில் அளித்ட அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த உதயநிதிக்கும், திமுகவுக்கு நன்றி சொல்கிறோம். அரசியல் ரீதியாக மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். ஆனால் அண்ணா உருவாக்கிய கொள்கை திமுகவிற்கு மட்டும் உருவாக்கவில்லை. தமிழ்நாட்டிற்காகவும் இந்தியாவிற்காகவும் உருவாக்கிய கொள்கை. மாநிலங்கள் இல்லாத மத்திய அரசு இல்லை.. அண்ணா கூறியதுபோல் மாநிலங்களுக்கான சுயாட்சி இன்றி இந்தியா முழுமை பெறாது.
தமிழ்நாடு வளர்ச்சியடைந்த மாநிலமாக உள்ளது. ஆனால் அது அரசியலில் பிரதிபலிக்கவில்லை. தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும். இன்னும் 25 ஆண்டுகாலத்திற்கு 543 எம்பிக்கள் என்ற எண்ணிக்கையிலேயே தொடர வேண்டும்.. தமிழக எம்பிக்கள் வெளிநடப்புச் செய்யாமல் 39 எம்பிக்கள் எதிர்த்து வாக்களிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா கொண்டு வரப்படும்போது தமிழ்நாட்டின் 39 எம்பிக்களும் வெளிநடப்பு செய்யாமல், மசோதாவிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும்” என்றார்.

