11 மணி முதல் 3.30 மணிவரை விளையாட்டுப் போட்டிகளை நடத்தக்கூடாது - ஆதவ் அர்ஜூனா
தமிழகத்தில் முற்பகல் 11 மணி முதல் 3.30 மணிவரை விளையாட்டுப் போட்டிகளை நடத்தக்கூடாது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் உரையாற்றிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “வெய்யிலின் தாக்கம் தீவிரமாக உள்ள நிலையில், பள்ளிகளில் அல்லது விளையாட்டுச் சங்கங்கள் சார்பில் நடத்தும் போட்டிகள் முற்பகல் 11 மணி முதல் 3.30 மணிவரையில் நடத்தக் கூடாது. வெய்யிலின் தாக்கம் குழந்தைகளின் உள்ளுறுப்புகளையும் பாதிக்கிறது. இதுதொடர்பாக புதிய கொள்கைகள் துறை செயலர்களுடன் விவாதிக்கப்பட்டுள்ளது. ரூ.3 கோடியில் மினி ஸ்டேடியம் அமைக்க முடியாது. ஒரு டிராக் அமைப்பதற்கு மட்டுமே ரூ.10 கோடி செலவாகும். அதனால் தான் திட்டத்தை திருத்தி அமைக்கிறோம். கபடி விளையாட்டுக்காக சிறப்பு திட்டங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். முக்கியமாக கபடை எங்கெல்லாம் விளையாடுகிறார்களோ அங்கெல்லாம் சிறப்பு ஸ்டேடியம் உருவாக்கப்படும். விளையாட்டு துறையில் 100-ல் 60 பேர் டெல்டாவில் இருந்தே வருகின்றனர். நானும் டெல்டாகாரன் தான். சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வகையில் டெல்டா மாவட்டங்களில் உள்ள மைதானங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. சென்னை நேரு விளையாட்டு அரங்கம் போல அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டு அரங்கங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

