"ஜப்பான், சிங்கப்பூருக்கு நிகராக தமிழ்நாட்டை மாற்றுவோம்"- ஆதவ் அர்ஜுனா
சென்னை சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 35 வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பொதுப்பணி,நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜூனா மற்றும் மாண்புமிகு நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் முனைவர் நெ. மரிய வில்சன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மாணவர்களிடம் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “50 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஒரு புரட்சி நடந்துள்ளது. இதற்கு காரணம் மாணவர்களும் இளைஞர்களும்தான். தமிழ்நாட்டில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இளைஞர்கள். அவர்களின் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார். வட மாவட்டங்களில் இருக்கும் பெண்கள் சென்னை வந்து பெரிய பெரிய கல்லூரிகளில் படிக்க இப்போதும் தயங்குறார்கள்.. அதை மாத்தணும். அடுத்த 50 ஆண்டை மாற்றப் போவது மாணவர்கள்தான். அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் மாணவர்கள் கவனம் செலுத்தினால் அடுத்த 40 முதல் 50 ஆண்டுகளில் உலகை வழிநடத்தும் தொழில்நுட்பத்தை தமிழ்நாடு உருவாக்க முடியும் என்றும். நினைத்தால் நிச்சயம் சாதிக்கலாம்! சிறிய நாடான ஜப்பான் 4 டிரில்லியன் டாலருக்கும் மேற்பட்ட பொருளாதாரத்தை உருவாக்கியிருக்கையில், திறமையும் வளமும் நிறைந்த நமது நாடு 1.5 டிரில்லியன் அல்ல, 2 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கையும் எட்ட முடியும்” என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

