ஜனநாயகன் லீக் விஜய்க்கான மிரட்டல்- ஆதவ் அர்ஜூனா

 
aadhav

நேற்று மாலை ஜன நாயகன் திரைப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் வெளியான நிலையில் இன்று காலை 3 மணிநேரம் கொண்ட முழு படமும் இணையத்தில் கசிந்தது. ஜனநாயகன் படத்தின் காட்சிகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜனநாயகன்

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா,  “ஒரு படம் வெளியாகும் முன்பு வரை அது, சாட்டிலைட் கட்டுப்பாட்டில் இருக்கும். இப்போது சாட்டிலைட் பாஜக கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஜனநாயகன் படத்தை வெளியிட விடாமல் முடக்கியது மத்திய இணையமைச்சர் எல்.முருகன். ஜனநாயகன் படத்தை இணையத்தில் வெளியிட்ட பாஜக, திமுகவின் கூட்டு சதி. திமுகவின் உதயநிதியுடன் சேர்ந்து எல்.முருகன் முடக்கிவருகிறார். ஜனநாயகன் படத்தை நிறுத்த பாஜக எந்த அளவு அழுத்தம் கொடுத்தத் என்பது அனைவரும் தெரியும். விஜய்க்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட வேண்டும் என்பதற்காக இணையத்தில் வெளியிட்டுள்ளனர். எம்ஜிஆருக்கு கூட திமுகவினர் இதுபோன்ற நெருக்கடிகளை கொடுத்துள்ளனர். இந்த அழுத்தத்திற்கு எல்லாம் விஜய் அடிபணிய மாட்டார்” என்றார்.