சமூக நீதி பேசும் ஆ.ராசா ஏன் பெரம்பலூர் தொகுதியில் இருந்து நீலகிரிக்கு ஓடினார்?- ஆதவ் அர்ஜூனா
சமூக நீதி பற்றி பேசும் ஆ.ராசா ஏன் சொந்த தொகுதி பெரம்பலூரில் போட்டியிடாமல் நீலகிரி சென்று போட்டி இடுகிறார்..? என விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி ஆ.ராசா, “கூட்டணியில் குறைந்தபட்ச செயல்திட்டம் கேட்பது நகைப்புக்குரியது. இப்படி பேசுவது கூட்டணி அறத்திற்கு சரியாக வராது. கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த ஆதவ் அர்ஜுனா முயற்சிக்கிறார். இவர்கள் பாஜகவினருக்கு துணை போகின்றனர்” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
செய்து முடிக்கும் வரை
— Aadhav Arjuna (@AadhavArjuna) September 24, 2024
செய்ய முடியாதது
போலதான் இருக்கும்..
- நெல்சன் மண்டேலா pic.twitter.com/6adug7AP0i
இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “விசிக அதிகாரப் பரவலை நோக்கி செல்வது எப்படி பாஜகவுக்கு துணை போவதாகும்? ஆ.ராசாவின் கருத்து தவறானது. விசிகவிலிருந்து 2 அமைச்சர்கள் உருவானால் அவர்கள் பாஜகவிற்கு சப்போர்ட் பண்ணுவார்களா? இந்த தாக்கத்தை ஏற்படுத்தாதீர்கள். அதிகாரம் குறித்து கேள்வி கேட்டால் சங்கீகள், பாஜகவினர் என்ற தவறான தாக்கத்தை ஏற்படுத்தாதீர்கள். திமுகூட்டணியில் குறைந்தபட்ச செயல்திட்டம் கோருவதில் என்ன தவறு உள்ளது? விசிகவால் கொடியை ஏற்றமுடியவில்லை. ஆணவக் கொலைக்கு எதிராக சட்டம் இயற்றமுடியவில்லை. ஆகவே எதிர்காலத்தில் விசிக அமைச்சரை உருவாக்க வேண்டுமென கேட்டேன். சமூக நீதி பற்றி பேசும் ஆ.ராசா ஏன் சொந்த தொகுதி பெரம்பலூரில் போட்டியிடாமல் நீலகிரி சென்று போட்டி இடுகிறார்..? சொந்த தொகுதியிலேயே நின்று அவர் வெற்றி பெறலாமே!” என்றார்.