6 மாதங்களில் ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்: ஆதவ் அர்ஜுனா

 
aadhav arjuna

கடந்த 6 மாதங்களில் பொதுப்பணித் துறை உள்பட தனது துறைகளில் நடந்தவற்றை பட்டியலிட்டு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேட்டியளித்தார். 

இதுதொடர்பாக ஆதவ் அர்ஜூனா பேசுகையில், "பல்வேறு துறைகளில் தவறுகளை, ஊழல்களை சரி செய்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம். பினாமி நிறுவனங்கள் டெண்டரில் இருந்துள்ளன. அவற்றை கண்டறிந்து புகார் அளித்துள்ளோம். ஒவ்வொரு துறையிலும் அவர்கள் அறிவிப்பை வெளியிட்டு, ஒப்புதல் அளித்த பிறகே பணம் வரும். ஊழல், லீக்கேஜ் தடுக்கப்பட்டுள்ளது.... திமுக ஆட்சியில் பெயரளவுக்கு தான் ஆன்லைன் டெண்டர்... டெண்டர்களில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வந்திருக்கிறோம்.

ஒரு ரூபாய் பணம் வாங்காமல் அரசு அதிகாரிகளுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.  கடந்த காலங்களில் அமைச்சர்களின் பினாமி நிறுவனங்கள் நிறைய டெண்டர்கள் எடுத்துள்ளார்கள்.  அரசு கட்டடங்கள் உடனடியாக சரி செய்யப்படும்.  அமைதியாக 6 மாத காலம் துறையை மறுசீரமைப்பு செய்தோம். அரசு பள்ளிகளில் 15,661 கழிப்பறை பயன்படுத்த முடியாமல் உள்ளது." என்றார்.