கரூர் சம்பவத்தில் காயமுற்றவர்களை கைவிட்டதா தவெக அரசு?- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

 
கரூர் சம்பவத்தில் காயமுற்றவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும்- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

முதல்வர் விஜய் நாளை கரூர் செல்லவுள்ள நிலையில் நேரில் சென்று பொதுக்கூட்ட ஏற்பாடுகளை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “ஒரு செய்தி வெளியானது. கரூர் கூட்டநெரிசலில் பலியானோருக்கு மட்டும் நிதியுதவி உடனடியாக வழங்கப்பட்டது. காயமடைந்தவர்களுக்கு எவ்வித நிதியுதவி வழங்கப்படவில்லை என புகார் எழுந்தது. கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோருக்கு மட்டுமல்ல காயமடைந்தவர்களுக்கும் மிக விரைவில் நிதி உதவி அளிக்கப்படும், அதற்கான பட்டியல் ரெடி ஆகிவிட்டது. விரைவில் நமது முதலமைச்சர் 
விஜய் நிதி உதவியை வழங்குவார்கள்” என்றார்.