தமிழ்நாடே காத்திருந்த தருணம்.. முதல்வராகிறார் விஜய் - ஆதவ் அர்ஜூனா
May 9, 2026, 16:42 IST1778325121991
தவெகவுக்கு ஆதரவு தந்த இரு கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் ஆசான் திருமாவளவனுக்கு நன்றி என தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜூனா, “வெற்றி. வெற்றி. வெற்றி. தவெகவிற்கு ஆதரவு கடிதம் வழங்கியது விசிக. தவெகவுக்கு ஆதரவு தந்த இரு கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் ஆசான் திருமாவளவனுக்கு நன்றி. அனைத்து தோழமை கட்சிகளுக்கும் நன்றி... ஜனநாயகம் காக்கப்படும். எங்களது தலைவர் விஜய் முதலமைச்சராவார். மக்கள் ஆதரவுடன் தமிழக முதலமைச்சராவார் த.வெ.க. தலைவர் விஜய்” என்றார்.

