மாபெரும் மாற்றத்திற்கான மற்றொரு தொடக்கம் இந்த விழா - ஆதவ் அர்ஜுனா

 
aadhav

மாபெரும் மாற்றத்திற்கான மற்றொரு தொடக்கம், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் ஜனநாயகம் என்ற அரசியலமைப்பின் அடிப்படைக் கூறுகளை முன்வைத்து, புதியதோர் மக்கள் அரசியலுக்கான அடித்தளத்தை இட்டுள்ளது தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா. மக்களோடு இணைந்து, அவர்கள் அரசியலைப் பறைசாற்றிய மாபெரும் மாற்றத்திற்கான மற்றொரு தொடக்கம் இந்த விழா. வரலாற்று நாயகர்கள் யாரும் பிறப்பால் உருவாகுவதில்லை. மக்களோடு உழைக்கிறார்கள், மக்களுக்காகக் களத்தில் போராடுகிறார்கள், பிறகு, மக்கள் உரிமைக் கொண்டாடும் ஜனநாயகன் ஆகிறார்கள். இதன்மூலமே, மக்கள் வரலாறு படைக்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.