தேர்தல் வியூக பொறுப்பாளராக ஆதவ் அர்ஜூனா நியமனம்!!

 
tm

விசிகவின் தேர்தல் வியூக பொறுப்பாளராக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Thiruma

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த முறை போட்டியிட்ட விழுப்புரம், சிதம்பரம் தனித் தொகுதிகளில் மீண்டும் போட்டியிடுகிறது. தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வி.சி.க. தலைவர் திருமாவளவன் கையெழுத்தானது. 

tn

இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் விசிக வேட்பாளர்களாக சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் போட்டியிடுகின்றனர்.  இரண்டு தொகுதிகளுக்கும் தேர்தல் வியூக பொறுப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.