தமிழகத்தில் கடனை ஏற்படுத்தி அதிலும் ஊழல் செய்கின்றனர் - ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு

 
aadhav aadhav

வெளிநாடுகளில் வளர்ச்சியை உருவாக்கி ஊழல் செய்வார்கள், தமிழகத்தில் கடனை ஏற்படுத்தி, அதிலும் ஊழல் செய்கின்றனர் என தவெக தேர்தல் பிரசார
 மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா குற்றம் சாட்டியுள்ளார். 

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்று வருகிறது.  2ம் ஆண்டு விழாவையொட்டி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உரை நிகழ்த்த உள்ளார். தேர்தல் வியூகம், சுற்றுப்பயணம், கூட்டணி உள்ளிட்டவை குறித்து விஜய் உரையாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாங் கிஷோர் பங்கேற்றுள்ளார். 

இந்த விழாவில் பேசிய தவெக தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, தளபதி விஜய்-யை, தலைவர் என்று அழைக்கக்கூடிய பரிணாமத்தை நோக்கி பயணிக்கிறோம். மன்னராட்சி என உண்மையை பேசியதால், சூழ்ச்சிகள் என்னை சூழ்ந்தது. பல்வேறு சூழ்ச்சிகள் என்னை சூழ்ந்தபோது, தவெகவில் இணைய தலைவர் விஜய் என்னை அழைத்தார். வெளிநாடுகளில் வளர்ச்சியை உருவாக்கி ஊழல் செய்வார்கள். தமிழகத்தில் கடனை ஏற்படுத்தி, அதிலும் ஊழல் செய்கின்றனர். ஊழலை ஒழிக்கும் சக்தியாக பெரியாரை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்வோம். நிரந்தர தலைவர் விஜய் என குறிப்பிட்டு ஆதவ் அர்ஜுனா பேசினார்.