“ரூ.3,000ஐ நம்பி அடுத்த 25 ஆண்டுகால தமிழ்நாட்டை இழந்து விடாதீர்கள்”- ஆதவ் அர்ஜூனா

 
ஆதவ் ஆதவ்

ரூ.3,000-ஐ நம்பி அடுத்த 25 ஆண்டுகால தமிழ்நாட்டை இழந்து விடாதீர்கள் என தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.

மாமல்லபுரத்தில் சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்றுவரும் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் உரையாற்றிய விஜய், “விசிக தொண்டர்கள் தவெக தொண்டர்களாக மாறிவிட்டார்கள். அம்பேத்கரையும் பெரியாரையும் இணைத்த ஒரே கட்சி தவெக தான். பாஜகவை எங்கு எதிர்க்க வேண்டுமோ அங்கு எதிர்ப்போம். ரூ.3,000-ஐ நம்பி அடுத்த 25 ஆண்டுகால தமிழ்நாட்டை இழந்து விடாதீர்கள். ஒரு தலைவர் தெய்வத்தால் அன்பால் உருவாக்கப்படுபவர் அல்ல தியாகத்தால் உருவாக்கப்படுபவர். தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பத்தையும் செட்டில் ஆக வைப்பது தான் எங்கள் தலைவர் விஜயின் நோக்கம். இதுதான் திமுக விற்கும் தவெகவிற்கும் வித்தியாசம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தூக்கத்துல நடக்குற வியாதி இருக்கு. மு.க.ஸ்டாலினுக்கு சொந்தமா புள்ள இருக்குற தைரியம். 


1967ல் மிகப்பெரிய கட்சி காங்கிரஸ்தான். 40 சதவீதம் வாக்கு வங்கி வைத்திருந்தார்கள். ஆனால் அன்றைக்கு மக்கள் தேர்ந்தெடுத்தது அண்ணாவைதான். காரணம் அவருடைய தலைமை. தலைமையைதான் மக்கள் நம்புவார்கள். அப்படிப்பட்ட தலைமையாக நம்முடைய தலைவர் இருக்கிறார். நம் தலைவர் பேசும்போது யூடியூபில் 5 கோடி பேர் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அதே முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினால் 300 பேர் தான் கேட்பார்கள். இதற்கு ஒரு அரசு, செய்தித்துறை, கட்சி, ஐடி விங், 16 சேனல். இப்பவே நமக்கு 2 கோடி ஓட்டுகள் இருக்கு. திமுகவை தாண்டிவிட்டோம்” என்றார்.