வெற்றி மகளிர், கறவை மாடு திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம்..!!

 
govt

தமிழக அரசின் வெற்றி மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டம், விலையில்லா கறவை மாடு வழங்கும் திட்டங்களில் பயன்பெற ஆதார் எண் கட்டாயம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தமிழக அரசு தனது அரசிதழில் (Tamil Nadu Government Gazette) வெளியிட்டுள்ளது.

கிராமப்புற ஏழைப் பெண்கள், ஆதரவற்ற விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் இந்த இரு திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.

வெற்றி மகளிர் ஆடுகள் வழங்கும் திட்டம்: இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காகச் சுமார் ₹109 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டம்: இத்திட்டத்திற்காக ₹57 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டு அரசாணை (G.O.Ms.No.149, நாள்: 17.11.2026) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் மானியங்கள் உண்மையான பயனாளிகளுக்கு வெளிப்படைத்தன்மையுடனும், எவ்வித முறைகேடும் இன்றியும் நேரடியாகச் சென்றடைவதை உறுதி செய்வதற்காக ஆதார் சட்டம் 2016 (பிரிவு 7)-ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆதார் எண் இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தத் திட்டங்களில் பயன்பெற விரும்பும் பெண்கள் தங்களது ஆதார் எண்ணைச் சமர்ப்பித்து அங்கீகாரம் (Authentication) பெறுவது அவசியமாகும். ஒருவேளை பயனாளியிடம் ஆதார் எண் இல்லாத பட்சத்தில், விண்ணப்பிப்பதற்கு முன்பாக ஆதார் எண்ணிற்காகப் பதிவு (Enrolment) செய்திருக்க வேண்டும்.

பதிவு ஒப்புகைச் சீட்டு (EID): ஆதார் அட்டைக்காக விண்ணப்பித்த பிறகும், ஆதார் எண் ஒதுக்கப்படாமல் இருந்தால், ஆதார் பதிவு மையத்தில் வழங்கப்பட்ட பதிவு அடையாள எண் (Enrolment ID - EID) கொண்ட ஒப்புகைச் சீட்டைச் சமர்ப்பிக்க வேண்டும்.

சிறப்பு முகாம்கள்: ஆதார் பதிவு செய்யாத பயனாளிகளுக்காகக் கால்நடை பராமரிப்புத் துறையே உரிய இடங்களில் ஆதார் பதிவு மையங்களை அமைத்தோ அல்லது பதிவாளர்களுடன் ஒருங்கிணைந்தோ அவர்களைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் எண்ணிற்கு விண்ணப்பித்து, அது கைக்குக் கிடைக்கும் வரை தகுதியான பெண்களுக்குத் திட்டப் பலன்கள் மறுக்கப்படக் கூடாது என்பதற்காக, மாற்று அடையாள ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும் தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகள் ஆதார் பதிவு ஒப்புகைச் சீட்டுடன் (EID), கீழ்க்காணும் புகைப்படத்துடன் கூடிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைச் சமர்ப்பிக்கலாம்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட

வாக்காளர் அடையாள அட்டை (EPIC)

.

குடும்ப அட்டை (Ration Card)

.

வட்டாட்சியர் (Tahsildar) நிலைக்குக் குறையாத வருவாய்த் துறை அதிகாரி அல்லது அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரியால் வழங்கப்பட்ட

சாதிச் சான்றிதழ் அல்லது இருப்பிடச் சான்றிதழ்

.

அரசு அல்லது பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட

மருத்துவ அல்லது காப்பீட்டு அடையாள அட்டை

.

இந்திய பாஸ்போர்ட் (Passport)

அல்லது

ஓட்டுநர் உரிமம் (Driving Licence)

.

அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தால் வழங்கப்பட்ட

10-ஆம் வகுப்பு அல்லது 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

.

மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ அடையாள அட்டை

(UDID Card)

அல்லது மருத்துவச் சான்றிதழ்