மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு : இனி ஆதார் அட்டை தேவையில்லை..!

 
1

அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிமுகப்படுத்தியுள்ள புதிய ஆதார் செயலி, முற்றிலும் டிஜிட்டலாகவும், உயர் பாதுகாப்பு அம்சங்களுடன் வரவுள்ளது. இதன் முக்கிய அம்சமே  Face ID மற்றும் பயனர் ஒப்புதல் இல்லாமல் எந்த தகவலும் அணுக முடியாது.

இது தற்போது பீட்டா நிலையில் செயல்பட்டு வரும் நிலையில் இந்த செயலியில், ஆதார் விவரங்களை பாதுகாப்பாக பகிர முடியும். இனி, ஹோட்டல், கடை, அல்லது பயணத்தின் போது நம் ஆதார் நகலை தர வேண்டிய தேவை இல்லை.

அதேவேளை, பயனர் கட்டுப்பாடு முற்றிலும் நம் கையில் இருக்கும்.  மோசடியாக நமது ஆதார் ஐடியை யாரும் பயன்படுத்த முடியாது என்பதால் தேர்ந்தெடுத்த பாதுகாப்பு உறுதி. QR ஸ்கேன் மூலம் உடனடி சரிபார்ப்பு செய்யும் வசதி கூட உண்டு.

மேலும் வெளியூர் செல்லும்போது, தங்கும் விடுதிகளில் ஆதார் அட்டைக்கு பதிலாக இந்த செயலியை பயன்படுத்தலாம். இதனால் ஒருவரிடமிருந்து எதற்காக ஆதார் அட்டைப் பெறப்படுகிறதோ, அதைத் தாண்டி வேறு எந்தக் காரணத்துக்காகவும் இந்த விவரங்களை பெற முடியாது. 

இந்த புதிய செயலி, போலி ஆதார் பயன்பாடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் என்றும், ஆதார் தகவல்கள் கசியும் அபாயம் இனி இருக்காது என்றும் அரசு உறுதிபட கூறுகிறது.