“காதலித்தது தப்பு”... கதந்துபோன காதல்... கதறி அழுத இளம்பெண் தற்கொலை

 
death death

நாகர்கோவில் அருகே காதலித்து திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

suicide

நாகர்கோவில் கீழ மறவன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் செல்வ சரண் (25) டிரைவர். இவரது மனைவி ரேஷ்மா (20). இவர்கள் இருவரும் கடந்த 2023 ல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். உறவு முறையில் செல்வ சரண். ரேஷ்மாவுக்கு அத்தை மகன் ஆவார். திருமணத்திற்கு பின், அவர்கள் கீழ மறவன் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தனர். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் ஏற்பட்ட தகராறில் ரேஷ்மா தூக்கு போட்டு தற்கொலை செய்தார்.கோட்டார் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

திருமணமான 2 ஆண்டுகளில் தற்கொலை செய்திருப்பதால், ஆர். டி.ஓ. விசாரணையும் நடந்தது. தற்கொலைக்கு முன், தனது தாயாருக்கு வாட்ஸ் அப்பில் ரேஷ்மா ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பினார். அதில்,  “எனது கணவருக்கு என்னை பிடிக்கவில்லை. அவர் வேறு திருமணம் செய்ய போகிறார். காதலித்தது தப்பு” என்று கூறி கதறி அழுதுள்ளார். கணவன், மனைவிக்கு இடையே பிரச்சினையில் ரேஷ்மாவை, திட்டும் போது கணவர் செல்வ சரண் கூறிய வார்த்தைகள் ரேஷ்மாவை தற்கொலை செய்ய வைத்திருக்கிறது என அவரின் உறவினர்கள் கூறியுள்ளனர்.. இதன் அடிப்படையில் விசாரணை நடந்தது. இந்த நிலையில் ரேஷ்மாவை தற்கொலைக்கு தூண்டியதாக, கணவர் செல்வ சரணை  போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.