பாம்பன் கடலில் குளிக்க சென்ற இளைஞர் மாயம்

 
பள்ளியை கட் அடித்துவிட்டு கடலில் குளிக்க வந்த பள்ளி மாணவன் அலையில் சிக்கி மாயம்!

பாம்பன் குந்து கால் கடலில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் கடலில் மூழ்கி மாயமான சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இப்படியொரு பாலம் இந்தியாவில் வேறு எங்கும் இல்லை: லேட்டஸ்ட் டெக்னாலஜியுடன்  பாம்பன் புதிய பாலம்

ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் பள்ளிவாசல் தெரு பகுதியை சேர்ந்த சுமார் ஏழு இளைஞர்கள் இன்று மதியம் ஒரு மணி அளவில் பாம்பன் குந்து கால் கடற்கரையில் குளிக்கச் சென்றுள்ளனர். இந்நிலையில் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது திடீரென பள்ளிவாசல் தெரு பகுதியை சேர்ந்த ஜாகிர் உசேன் மகன் 20 வயதுடைய  முகமது முஜாஹித் என்ற இளைஞர் கடலின் ஆழமான பகுதிக்கு நீச்சல் அடித்து உள்ளே சென்றுள்ளார். கடலில் திடீரென குளித்துக் கொண்டிருக்கும் பொழுது அவரை ராட்சத சாலைகள் உள்ளே இழுத்துச் சென்றுள்ளன. இந்நிலையில் அவர் மாயமாகியுள்ளார். அவருடன் குளிக்க சென்ற இளைஞர்கள் பதறி அடித்துக் கொண்டு அருகில் இருந்தவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் அறிந்து வந்த பாம்பன் காவல்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர காவல் குழும அதிகாரிகள் ஆகியோர் இணைந்து மாயமான இளைஞனை தீவிரமாக பாம்பன் குந்துகால் கடற் பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டனர். அதிக நேரம் ஆகியும் இளைஞர் மாயமான சம்பவத்தால் பாம்பன் பகுதியில் முத்து குளிக்கும் நபர்களை அழைத்து வந்து தற்போது குந்து கால் கடற்கரை முழுவதும் மாயமான முஜாஹித் என்ற இளைஞரை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் பாம்பன் குந்துகால் பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.  கடற்கரையில் குளிக்க வந்து இளைஞர் ஒருவர் மாயமாகி இதுவரை அவர் கிடைக்காத காரணத்தால் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.