4 நாட்களாக மருந்துகூட போடல... காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சையில் இருந்த இளைஞர் உயிரிழப்பு

 
4 நாட்களாக மருந்துகூட போடல... காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சையில் இருந்த இளைஞர் உயிரிழப்பு

மதுரையில் பைக் விபத்தில் சிக்கி காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சையில் இருந்த இளைஞர் உயிரிழந்த நிலையில், உரிய சிகிச்சை அளிக்காமல் உதாசீனப்படுத்தியதாக உறவினர்கள் கண்ணீர் மல்க குற்றஞ்சாட்டுகின்றனர்.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பைக் விபத்தில் சிக்கி காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சையில் இருந்த இளைஞர் உயிரிழந்த நிலையில், உரிய சிகிச்சை அளிக்காமல் உதாசீனப்படுத்தியதாக உறவினர்கள் கண்ணீர் மல்க குற்றஞ்சாட்டுகின்றனர். விபத்தில் காயமடைந்து அனுமதிக்கப்பட்ட இளைஞரின் கையில் இருந்த காயத்திற்கு கூட 4 நாட்களாக மருந்துபோடவில்லை என்றும், கட்டு போடுவது முதல் அனைத்திற்கும் பணம் கேட்பதாக பரமேஸ்வரனின் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். இதனால் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இளைஞர் பரமேஸ்வரனின் உறவினர்கள் உடலை வாங்க மறுப்பு தெரிவித்தனர்.

இதனிடையே மதுரையில் உரிய சிகிச்சை அளிக்காததால் இளைஞர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டிய விவகாரத்தில் ராஜாஜி அரசு மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக மருத்துவமனை அளித்துள்ள விளக்கத்தில், கால்முறிவு ஏற்பட்டு சிகிச்சையில் இருந்த பரமேஸ்வரன் என்ற இளைஞருக்கு, நரம்புகள் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம். பிரேத பரிசோதனைக்கு பின்னர்தான் முழுமையான காரணம் தெரியவரும். மருத்துவமனையில் பணம் பெற்றதாக வந்த குற்றச்சாட்டு குறித்து ஆதாரம் இருந்தால் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.