யானையை செல்பி எடுக்க முயற்சி செய்த இளைஞர் யானை மிதித்து பலி

 
elephant

போச்சம்பள்ளி அடுத்த அகரம் கிராமத்தை சுற்றியுள்ள பகுதியில் இரண்டு காட்டு யானைகள் சுற்றித் திரிவதால் அப்பகுதி மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. 

elephant

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் சுற்று வட்டார பகுதிகளில் இன்று அதிகாலை புகுந்த இரண்டு யானைகள் சுற்றித் திரிவதால் பதற்றமான சூழ்நிலை உள்ளது. இந்நிலையில் போச்சம்பள்ளி அடுத்த புங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த சாய்பாபா கோவில் பூசாரி ராம்குமார் (27) என்பவர் யானையின் முன்பு செல்பி எடுக்க முயன்ற போது யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அகரம் சுற்றுவட்டார பகுதிகளான மறுதேறி குடிமேனஹள்ளி, கோடிபுதூர், புங்கம்பட்டி, மோட்டுப்பட்டி, செல்லம்பட்டி ஆகிய பகுதிகளில் மாறி மாறி யானைகள் சுற்றித் திரிவதால் கிராமப் பகுதியில் பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பஞ்சப்பள்ளி காட்டுப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிக்குள் யானை புகுந்துள்ளது. கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலர் ரவி தலைமையில் 10ற்கும் மேற்பட்ட வன அலுவலர்கள் யானையை காட்டுப்பகுதிக்குள் விரட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஆங்காங்கே உள்ள கிராம மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தும் வருகின்றனர்.