இளம்பெண்ணை நிர்வாணமாக வீடியோ காலில் வரச்சொல்லி மிரட்டிய வாலிபர்! புதுச்சேரியில் பரபரப்பு
புதுச்சேரி மாடலிங் பெண்ணை நிர்வாண வீடியோ காலில் வரச்சொல்லி மிரட்டிய வாலிபரை சைபர் கிரைம் போலீசார் சென்னை தனியார் நிறுவன மேலாளரை கைது செய்தனர்.
புதுச்சேரியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனியார் கல்லூரியில் பட்டபடிப்பு படித்துக்கொண்டே பியூடிசியன் மாடலிங் செய்து வருகிறார். மேலும் அவர், தனது இனஸ்டாகிராமில் தன்னுடைய புகைப்படங்கள் அனைத்தையும் பதிந்து வருகிறார். அவருடைய நண்பர்கள் பலரும் மாடலிங் செய்து வருகிறார்கள். அவர்களும் இவருடைய இன்ஸ்டாகிராமை பல ஆயிரம் நபர்கள் (follow) தொடர்கிறார்கள். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மேற்படி மாடலிங் செய்கின்ற பெண்ணின் புகைப்படத்தை எடுத்து கேவலமாக சித்தரித்து அதை மார்பிங் செய்து அவருக்கே அனுப்பி ஆபாச வார்த்தைகளால் வர்ணித்து தன்னுடன் செல்போனில் பேச வருமாறும் அல்லது என்னுடைய INSTAGRAM-மூலம் ஆபாசமாக வீடியோ காலில் வர வேண்டும் எனவும் இல்லையென்றால் மார்பிங் செய்த புகைப்படங்களை எல்லாம் உங்கள் நண்பர்களுகெல்லாம் அந்த ஆபாச புகைப்படத்தை அனுப்பி விடுவேன் என்று மிரட்டல் வரவே, இது சம்பந்தமாக இணைய வழி காவல் நிலையத்தில் அப்பெண் புகார் கொடுத்தார். காவல் ஆய்வாளர் தியாகராஜன் அவர்கள் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்.
கடந்த நான்கு நாட்களாக விசாரணை மேற்கொண்டதில் குற்றவாளி பற்றிய விவரம் தெரிந்தது. மேலும் அந்த பெண்ணின் சக நண்பர்கள் சிலருக்கும் அவர்களுடைய புகைபடத்தையே இன்ஸ்டாகிராமில் இருந்து எடுத்து இதே போன்று ஆபாசமாக மார்பிங் செய்து அனுப்பி மிரட்டியதும் தெரியவந்தது. மேற்படி நபருடைய செல்போன் கண்காணிக்கப்பட்டு அவருடைய இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் போன்றவை இயக்கங்களை கண்டுபிடித்து, அவர் எங்கே இருக்கிறார் என்பது தெரிய வரவே, தனிப்படை அமைத்து குற்றவாளியை கைது செய்தனர். அவருடைய செல்போனை ஆய்வு செய்து விசாரித்த போது அந்த வாலிபர் கடலூர் மாவட்டம் திருவாமூர் பகுதி என்பதும் பண்ருட்டியில் தற்போது குடியிருந்து வருகிறார் என்பதும் அவர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணி செய்யும் ரூபசந்துரு (25) என்பது தெரியவந்தது. மேலும் அவருடைய செல்போனை ஆய்வு செய்தபோது 32-க்கும் மேற்பட்ட பெண்களை அவருடைய இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப்பில் இருந்து புகைப்படங்களை திருடி மார்பிங் செய்து கேவலமாக சித்தரித்து மிக அருவருக்கத்தக்க வார்த்தைகளை பேசி ஆபாச வீடியோக்களை போட்டோக்களை அவர்களுக்கே அனுப்பி மிரட்டியது விசாரணையில் தெரியவந்தது. மேற்படி நபரின் செல்போனை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாண்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இது பற்றி முதுநிலை காவல் கண்காணிப்பாளர்நாரா சைத்தானியா IPS கூறுகையில், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், பேஸ்புக் போன்றவற்றை செக்யூரிட்டி ஆப்ஷன் என்னென்ன பாதுகாப்பு நடைமுறைகள் இருக்கின்றதோ அனைத்தையும் பின்பற்றுமாறும் அப்படி பின்பற்றாவிடில் உங்களுடைய புகைப்படங்களை எளிதில் மற்றவர்கள் எடுக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவித்தார்.