'கேட்ச் பிடித்தபோது விபரீதம்’- கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு!

 
Death Death

கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

death

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மணமேல்குடி அருகே ஓட்டங்கரை பகுதியை சேர்ந்தவர் சுமன் (22) இவர் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு நண்பர்களோடு திரிந்துள்ளார்.இந்நிலையில் இன்று நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது மேலே சென்ற பந்தை பிடிக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக தாழ்வாகச் சென்ற உயர் மின்னழுத்த மின்கம்பி மீது கைப்பட்டு மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மணமேல்குடி காவல்துறையினர் உடலை மீட்டு மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடிய இளைஞர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.