கஞ்சா கிடைக்காத விரக்தியில் பெரியப்பாவை கொன்ற போதை ஆசாமி

 
murder

திருச்செந்தூர் அருகே குலசேகர பட்டினத்தில் கஞ்சா கிடைக்காததால் விரக்தியில் குடி போதையில் உறவினரின் கழுத்தை நெரித்து கொலை செய்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. 

murder

திருச்செந்தூர் அருகே குலசேகரப்பட்டினத்தில் சாத்தான்குளத்தை சேர்ந்த ஆத்தி முத்துவின் மகன் நடராஜன் என்பவர், தனது மனைவி சுப்புலட்சுமி இறந்த பிறகு தனது உறவினரான கொளுந்தியாவின் வீட்டில் நடராஜன் வசித்து வந்துள்ளார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவரது உறவினரான சின்னத்துரை என்பவருக்கும் நடராஜனுக்கும் நள்ளிரவில் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறானது. நடராஜன் மனைவியான தனது பெரியம்மா சுப்புலட்சுமி மரணத்திற்கு நடராஜன் தான் காரணம் என்று குடிபோதையில் சின்னத்துரை நடராஜனை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

இருவருக்கும் இடையில் வாக்குவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் குலசேகரபட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து விசாரணை நடத்திய போது சின்னத்துரை தானே முன்வந்து காவல்துறையினரிடம் கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். காவல்துறையினர்கள் சின்னத்துரை குடிபோதையில் தான் உளறுகிறான் என்று நினைத்து அவரை விசாரிப்பதற்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்பொழுது விசாரணையில் தனது உறவினரான பெரியப்பா நடராஜனை குடிபோதையில் கொன்றுவிட்டது உறுதியானது என போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. 

கணவன் மீதுள்ள ஆத்திரத்தில் மூன்று குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த தாய்

இது குறித்து போலீஸ் தரப்பில் கேட்கும் பொழுது குலசேகரபட்டின பகுதியில் கஞ்சா விற்பனை மந்தமாகி உள்ளதாகவும், கஞ்சா கிடைக்காத காரணத்தினால் தான் மதுவை தொடர்ந்து அருந்தியும் எந்தவித போதையும் தனக்கு தலைக்கு ஏறவில்லை, அதனால் தான் 10 வருடங்களுக்கு பின்னர் மரணம் அடைந்த தனது  பெரியம்மாவான சுப்புலட்சுமி தனது பெரியப்பா நடராஜன் அவரை சரியாக கவனித்துக் கொள்ளாமல் கொன்றுவிட்டார் என்பது தனக்கு நினைவில் வந்ததால் தான் குடிபோதையில் நடராஜனை கொலை செய்து விட்டதாக கூறினார். அதன்படி தற்பொழுது காவல் துறையினர் குலசேகரப்பட்டினம் காவல் நிலையத்தில் குற்றவாளி சின்னதுரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.