காவலரின் சட்டையைப் பிடித்து அடாவடி செய்த இளைஞர்!

 
1

கடலுார் மாவட்டம், மேல்பட்டாம்பாக்கத்தை சேர்ந்தவர்கள் கோமளா, விமலா. அருகருகே வீடுகளில் வசிக்கும் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இருவரும் தாக்கிக் கொண்டனர். நெல்லிக்குப்பத்தில் உள்ள உறவினர்களுக்கு விமலா தெரிவித்தார்.

தமிழ்குச்சிப்பாளையம் புகழ், 23, ஹரிஹரன், 26, ஜெகதீஷ், 22, ஆகிய மூவரும், கோமளா குடும்பத்தினரிடம் தகராறு செய்தனர். நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் வேலுமணி மற்றும் போலீசார், தகராறு செய்தவர்களை சமாதானம் செய்தனர்.

ஆத்திரமடைந்த புகழ் உள்ளிட்ட மூவரும் இன்ஸ்பெக்டர் வேலுமணி, எஸ்.ஐ., செந்தில்குமார், ஏட்டு அமுதராஜ் ஆகியோரை தாக்கினர். போலீசார் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நெல்லிக்குப்பம் போலீசார், புகழ் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிந்து, மூவரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.