லித்துவேனியா பெண்ணை கரம்பிடித்த ஊத்துக்கோட்டை இளைஞர்!

 
s

லித்துவேனியா நாட்டின் பெண்ணை காதலித்து தமிழ் முறைப்படி ஊத்துக்கோட்டை இளைஞர்  திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை சாவடி தெருவில் வசித்து வருபவர் கதிரவன். இவர் ஊத்துக்கோட்டை அரசு தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியராக உள்ளார். இவரது மகன் சூர்யகுமார், சிவில்  என்ஜினீயரிங் படித்து மேல் படிப்பிற்காக  வடக்கு ஐரோப்பாவில் உள்ள  லித்துவேனியா நாட்டிற்கு  சென்றார். பின்னர் அங்கு படிப்பு முடிந்ததும், அங்கேயே வேலை கிடைத்தது. அப்போது அவருக்கு, வேலைக்கு சேர்ந்த அதே இடத்தில் விலங்கு நல ஆர்வலரான அதே நாட்டைச் சேர்ந்த கமிலே டெக்னென் கைய்டே என்ற பெண்ணுடம் காதல் மலர்ந்துள்ளது. அவர்கள் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததால் இருவருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த நாட்டிலே பெண்ணின் முறைப்படி கிறிஸ்தவ  திருமணம் செய்து செய்து கொண்டனர்.

பின்னர் அந்த பெண் தமிழர்  முறைப்படி திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். தனது  பெற்றோர்கள்  சம்மதத்துடன்  தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து காதலன் ஊரான  ஊத்துக்கோட்டையில் உள்ள  சூர்யகுமாரின் குல தெய்வ கோயிலான பெரியாண்டவர் கோயிலில் வேத மந்திரங்கள் ஓத அக்கினி முன்பு மஞ்சள் கயிற்றில்  தாலி கட்டி  திருமணம் செய்து கொண்டார் .