“என் பொண்ணு எங்க இருக்குனே தெரியலையே.. VAO தான் கூட்டிட்டு போனாரு”- கதறும் பெற்றோர்
சேலத்தில் கை குழந்தை இருக்கும் கிராம நிர்வாக அலுவலர் , தனது மகளை கடத்திச் சென்றுவிட்டதாக பெண்ணின் தாயார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் தனது மகளை கிராம நிர்வாக அலுவலர் வினோத்குமார் என்பவர் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றுவிட்டதாக, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து கொண்டு கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது. நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறி அழுத நிலையில் காவல்துறையினர், அவரை சமாதானப்படுத்தினர். ஆனாலும் சமாதானம் அடையாமல், தனது மகளை மீட்டு தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருக்கும் நிலையில் கிராம நிர்வாக அதிகாரி வினோத்குமார் , ஆசைவார்த்தை கூறி தனது மகளை அழைத்துச் சென்றுவிட்டதாக புகார் தெரிவித்தார். குறிப்பாக முதல் மனைவியை நிர்வாக அலுவலர் விவாகரத்து செய்வதற்காக ஓமலூர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ள நிலையில் , தனது மகளை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுவிட்டதாக கூறியுள்ளார்.இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளார். எனவே விரைந்து நடவடிக்கை எடுத்து எனது மகளை மீட்டுத் தரக்கோரி வலியுறுத்தினர்.


