"நான் விஜய்க்கு ஆப்போசிட் இல்ல, எந்த கட்சிக்காரங்களும் என்ன இங்க அனுப்பல"- பனையூருக்கு வந்த பெண்ணால் பரபரப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் 6 ஆம் கட்ட மாவட்ட பொறுப்பாளர்களுக்கான நேர்காணல் மற்றும் அறிவிப்பு கூட்டம் விஜய் தலைமையில் பனையூர் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
ஏற்கனவே 95 மாவட்டங்களுக்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் 6 ஆம் கட்டமாக விருதுநகர், சென்னை விருகம்பாக்கம், திருவள்ளூர், திருப்பூர், செங்கல்பட்டு, மதுரை புறநகர், கூடலூர் உள்ளிட்ட 19 மாவட்ட பொறுப்பாளர்கள் இன்று நேர்காணல் நடத்தப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார்கள்.அப்போது , கட்சி அலுவலகம் முன்பு விஜயிடம் கோரிக்கை வைக்க வந்ததாகவும் அவரை கட்சி நிர்வாகிகள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
பனையூரைச் சார்ந்த சுதா என்பவர் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக உதவி கேட்டு விஜயிடம் மனு கொடுக்க வந்ததாகவும், அந்தப் பெண்ணை விஜயை சந்திக்க விடாமல் தடுப்பதாகவும் அது தொடர்பாக செய்தியாளர்களை சந்திக்க முற்பட்டபோது அவரை செய்தியாளர்களை சந்திக்க விடாமல் TVK TVK என்று நிர்வாகிகள் கோஷமிட்டனர். "நான் விஜய்க்கு ஆப்போசிட் இல்ல, எந்த கட்சிக்காரங்களும் என்ன இங்க அனுப்பல".. பனையூரில், உதவி கேட்டு வந்ததாக அப்பெண் செய்தியாளர்களிடம் கூறினார். அதனால் அந்த இடத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் நியமனம் முடிந்தபின் தவெக தலைவர் விஜய் பனையூர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சென்றார்.