திருமணமாகி 15 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை! விரக்தியில் பெண் தற்கொலை

 
fire

கள்ளக்குறிச்சி அருகே திருமணமாகி குழந்தை இல்லாத விரக்தியில் பெண் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண் தீக்குளித்து சாவு || PUDUKKOTTAI NEWS: DEATH OF WOMAN IN A FIRE

கள்ளக்குறிச்சி அருகே வீரசோழபுரம் கிராமத்தை சேர்த்த அசோக் (பூட்டு சாவி விற்பனை செய்பவர்). இவருடைய மனைவி கலைச்செல்வி.  இவர்களுக்கு  திருமண ஆகி சுமார் 15 ஆண்டுகள்  ஆகியும் குழந்தை இல்லை எனக் கூறப்படுகிறது. கலைச்செல்விக்கு சுகர், பிபி உள்ளிட்ட வியாதிகள் அதிகமாக இருந்தால் மன உளைச்சல் அடைந்து இருந்துள்ளார். இந்த மன உளைச்சலில் கணவர் வேலைக்கு சென்றதும் தனது உடலில் பெட்ரோல்  ஊற்றி தீக்குளித்துள்ளார். 

இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் உடலைக் கைப்பற்றி, அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.