ஆடு மேய்க்க சென்ற இளம் பெண் அரை நிர்வாணத்துடன் சடலமாக மீட்பு!

 
நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தில் ஆடு மேய்க்க சென்ற இளம் பெண் அரை நிர்வாணத்துடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

போராட்டம்

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே கரப்பாளையத்தை சேர்ந்தவர் விவேகானந்தன். விவசாயியான இவர் கால்நடைகளையும் வளர்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி நித்யா (28) என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் நித்யா கடந்த சனிக்கிழமை ஆடுகளை மேய்ச்சலுக்காக வீட்டின் அருகே  உள்ள ஓடை பகுதிக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் நித்யா வீட்டிற்கு வராத நிலையில் மாலை 6 மணிக்கு ஆடுகள் மட்டுமே வீட்டுக்கு தானாக திரும்பி சென்றுள்ளது. நித்யாவை காணாததால் விவேகானந்தன் வீட்டின் அருகே உள்ள ஓடைக்கு சென்றுள்ளார். அங்குள்ள முள்புதரில் நித்யா அணிந்திருந்த ஆடைகள் கிழிக்கப்பட்டு அரை நிர்வாண கோலத்துடன் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். 

இதுகுறித்து விவேகானந்தன் ஜேடர்பாளையம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவம் இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை க்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். நேற்று (12-3-2023) நித்தியா வின் உடல் கூறாய்வு செய்யப்பட்டது. இந்த நிலையில் ஜேடர்பாளையம் காவல்துறையினர் உரிய விசாரணை நடத்த வில்லை, தங்களுக்கு உரிய நீதி விசாரணை வேண்டும் குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உயிரிழப்பு உயிரிழப்பு

இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து அவரது உறவினர்கள் 100 க்கு மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளே நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் எஸ்.பி கலைச்செல்வன் மற்றும் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.  இந்த கொலை வழக்கு தொடர்பாக 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே போராட்டத்தை கைவிட்டு உடலை பெற்று செல்லுமாறு எஸ்.பி கலைச்செல்வன் அவர்களிடம் தெரிவித்தார்.

இறந்து போன நித்யாவிற்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அவரது குடும்பத்திற்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும். உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அவர்கள்  மாவட்ட ஆட்சியர் திருமதி ஸ்ரேயா பி சிங் கை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.