வீட்டை ஆட்டைய போட்ட உறவினர்கள்! சென்னைக்கு சென்றுவிட்டு சொந்தவூர் வந்த பெண்ணுக்கு அதிர்ச்சி!

 
Protest

கன்னியாகுமரி மாவட்டம் மார்தாண்டம் அருகே வீட்டை காணவில்லை என கணவனை இழந்த பெண் ஒருவர் மூதாட்டியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டை காணவில்லை என சாலையில் போராட்டம் நடத்திய விதவைப் பெண்...

கன்னியாகுமரி மாவட்டம் மார்தாண்டம் அருகே புளியவிளாகம் பகுதியை சேர்ந்தவர் லபிலாபல்ஸ், இவரது மனைவி தெரசா. லபிலாபல்ஸ், சென்னையில் ஓட்டுனராக பணியாற்றி வந்ததால் இருவரும் சென்னையில் தனது மகள் ஜெனிபர் உடன் வசித்து வந்தனர். 

இந்த நிலையில் லபிலாபல்ஸ் திடீரென மாரடைப்பால் உயிர் இழந்தார். தொடர்ந்து கணவனை இழந்த தெரசா   வறுமையால் வாடிய நிலையில் வாடகை கொடுக்க முடியாத காரணத்தால் சென்னையில் இருந்து வாடகை  வீட்டை காலி செய்து தனது உடமைகளோடு  சொந்த ஊரில் உள்ள வீட்டிற்கு சென்றார். அப்போது லபிலாபல்சின் அண்ணன் முறை உறவினர் விஐயகுமார் வீட்டை இடித்து விட்டு அவர் புது வீடுகட்டும் பணியில் ஈடுபட்ட காட்சிகளை கண்டு அதிர்ச்சி அடைந்த தெரசா, தனது வீட்டை காணவில்லை என்று கூறி உடைமைகளோடு தர்ணாவில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த  மார்த்தாண்டம் போலீசார் தாய் , மகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தங்களுக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என போலீசாரிடம் அவர்கள் கோரிக்கை வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.