"கொலை பண்ணிடுவேன்னு மிரட்டுராங்க ..." " ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த திமுக பிரமுகர்!!

 
t

ஈரோட்டில் ஏலச்சீட்டு நடத்தி 5 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த திமுகவை சேர்ந்த பெண் நிர்வாகி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

tn
ஈரோடு மாவட்டம் பவானி வடக்கு  திமுக மகளிரணி துணை அமைப்பாளராக உள்ளவர் சுமதி.  இவர் அப்பகுதியில் ஐந்து லட்சம் ரூபாய்க்கான ஏல சீட்டு நடத்தி வந்துள்ளார்.  20 மாத ஏலச்சீட்டில் 19 மாதம் முடிவடைந்த நிலையில் 5 லட்சம் தரவேண்டிய நபர் ஒருவருக்கு சுமதி பணம் தராமல் இழுத்தடித்து வந்ததாக தெரிகிறது.

generic erode

 கடந்த இரண்டு ஆண்டுகளாக பணம் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வந்த அவர் தொடர்ந்து பணம் கேட்டு வந்தால் தனக்கு கட்சி செல்வாக்கு இருக்கிறது கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.  இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்  ஈரோடு மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் திமுக நிர்வாகி சுமதி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி. உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.