ஆம்பூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து - பெண் உயிரிழப்பு
Jul 13, 2024, 09:01 IST1720841497327

ஆம்பூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டதில் பெண் உயிரிழந்துள்ளார்.
ஆம்பூர் அருகே கார், சொகுசு பேருந்து, சுற்றுல்லா வேன் ஆகிய 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது.
திருப்பத்தூர் ஆம்பூர் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது; காரில் பயணம் செய்த திலகம் என்ற பெண் உயிரிழந்தார் கார் மீது மோதாமல் இருக்க நிறுத்தப்பட்ட சொகுசுப் பேருந்தின் பின்புறம் சுற்றுலா வேன் மோதியதில், வேனில் பயணம் செய்த 8 பேர் படுகாயம் அடைந்தனர்.