வெளியான திருச்செந்தூர் கோவில் கருவறை வீடியோ! ஜெயிலர் பட நடிகர் மீது போலீசில் புகார்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கருவறையில் உள்ள மூலவரை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட திரைப்பட துணை நடிகரும், இன்ஸ்டா பிரபலமுமான செல்வா மீது காவல் நிலையத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சுவாமி தரிசனம் செய்ய வந்த துணை நடிகரும், இன்ஸ்டா பிரபலமுமான செல்வா கோவிலில் கருவறையில் உள்ள சுவாமி மூலவரை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இவர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர், தெலுங்கு நடிகர் வருன்தேஜ்வுடன் மட்கா உட்பட பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இன்ஸ்டாவிலும் இவர் மிகப்பிரபலமாக உள்ளார்.
வெளியான திருச்செந்தூர் கோவில் கருவறை வீடியோ
— PTR Thiyagarajan (@LionPRajan1) January 28, 2025
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை பதிவிட்ட துணை நடிகர்.. செல்போன் கொண்டு செல்ல தடை இருந்த போதிலும் வீடியோ எடுத்தது எப்படி?.. @PKSekarbabu pic.twitter.com/OV1eVjAYg5
இந்தநிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்த நிலையில் கோவில் நிர்வாகத்தினர் அதிர்ச்சிக்குள்ளாகினர். கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை இருந்த போதிலும் மூலவரை வீடியோ எடுத்து சமூக வலைளத்தில் பதிவிட்டுள்ளதால் கோவில் நிர்வாகம் பிரபல திரைப்பட துணை நடிகரும், இன்ஸ்டா பிரபலமுமான செல்வா மீது இணையதளம் வாயிலாக புகார் அளித்துள்ளனர். இந்தநிலையில் மீண்டும் கோவில் கருவரையில் உள்ள மூலவர் வீடியோ வெளியாகியிருக்கிறது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுபோன்ற பலர் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும் அச்சுறுத்தும் விதமாகவும் நாள்தோறும் சமூக வலைதளங்களில் பல வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இதற்கு கோவில் நிர்வாகம் மற்றும் நிலையத்துறை சார்பில் கட்டுப்பாடு விதித்து உரிய நடவடிக்கை எத்து கோவில்களின் புனிதத்தன்மையை பாதுகாக்க வேண்டுமென ஆன்மீக பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பக்தர்களுக்கு கோயில் சார்பாக செல்போன்களை உள்ளே கொண்டு போக கூடாது என்று தடை விதித்து உள்ளது, அதையும் மீறி செல்போனை பக்தர்கள்உள்ளே கொண்டு போகிறார்கள்.