இணையத்தில் வைரலாகும் நடிகர் அஜித் கிரிக்கெட் விளையாடும் வீடியோ..!
May 23, 2026, 12:51 IST1779520878351
நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மட்டுமல்லாமல் ஒரு கார்பந்தய வீரராகவும் அனைவரது கவனத்தையும் கவர்ந்து வருகிறார்.
அண்மைக்காலமாக ஸ்பெயின், அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெற்ற சர்வதேச கார் ரேசிங் போட்டிகளில் பங்கேற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வரும் இவர் 'அஜித்குமார் ரேசிங்' என்ற தன் சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் இந்நிறுவனம் கலந்துகொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது. அத்துடன் இந்த அணி ஐரோப்பிய எண்டூரன்ஸ் சாம்பியன்ஷிப்பில் கலந்து கொண்டு மூன்றாவது இடத்தைப் பிடித்து சாதனையும் படைத்துள்ளது.
இந்நிலையில் அஜித் கிரிக்கெட் விளையாடும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

