ஒரு யூனிட் ஆற்று மணலின் விலை ரூ.1000 - அரசாணை வெளியீடு!!

 
sand

ஒரு யூனிட் ஆற்று மணல் ரூ.1000 ஆக நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பொதுமக்கள் ஏழை எளியோர் புதிதாக வீடு கட்டுதல், பழுதுபார்த்தல் மற்றும் கட்டணம் மற்ற இதர பணிகளை எந்தவித சிரமமுமின்றி மேற்கொள்வதற்கு இன்றியமையாத கட்டுமானப் பொருளான ஆற்று மணலை எளிதில் பெறுவதற்காக எளிமையான புதிய வழிமுறைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்த உத்தரவிட்டார். தமிழகத்தில் ஆட்சி படுக்கையிலிருந்து ஆற்று மணலை எடுத்து மணல் நுகர்வோருக்கு விற்பனை செய்யும் பணிகளை , மீண்டும் தொடங்குவது குறித்து ஆய்வு செய்து வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை செயல்படும் வகையிலும், பொதுமக்கள் ஏழை, எளியோர் பயன்பெறும் வகையிலும் புதிய வழிமுறைகளை கடைப்பிடித்து, மணல் விற்பனை செய்யுமாறு ஆணையிடப்பட்டுள்ளது.

sand

பொதுமக்கள் ஏழை, எளியோர் எளிதாக இணைய வழியாக மணலுக்கான விலையினை செலுத்தி எந்தவித சிரமமுமின்றி, மணலை எடுத்து செல்வதற்கு வழி வகை செய்யப்பட்டுள்ளது.  பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து காலை 8 மணி முதல் 2 மணி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கியது போக மீத உள்ள மணலை பதிவு செய்தார் லாரி உரிமையாளர்களுக்கு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மணல் இருப்பைப் பொறுத்து வழங்கப்படும்.  தற்போது 16 குவாரிகள் மற்றும் 21 மாட்டு வண்டி குவாரிகள் இயக்குவதற்கு சுற்றுப்புற சூழல் தடையின்மை பெறப்பட்டுள்ளது. 

govt

 முதல் கட்டமாக தற்போது உள்ள தகவல் தொழில்நுட்ப புதிய வழிகாட்டுதல்கள் மணல் விற்பனை எளிமையாக உள்ளது. அரசு கிடங்குகளில் கூடுதலாக செயல்பட உள்ள, வங்கிகளில் கவுண்டர்கள் மூலமாக பொதுமக்கள் பணம் செலுத்தி, மணலை பெற்றுக்கொள்ளலாம். இவ்வசதியை தற்போது நடைமுறையில் உள்ள நெட் பேங்கிங் ,டெபிட் கார்டு மற்றும் யுபிஐ  ஆன்லைன் வழியாகவும், பணம் செலுத்தி பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்தது.

stalin

இந்நிலையில் ஏழை, எளிய பொதுமக்கள் வீடு கட்டுவதில் இன்றியமையாத பொருளாக இருக்கும் ஆற்றுமணலுக்கு அடிப்படை விலையை நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 
ஒரு யூனிட் ஆற்று மணலின் விலை ரூ.1000 ஆக நிர்ணயம் செய்து , முறைகேடுகளை தடுக்கும் வகையில் ஆற்று மணல் விற்பனை 24 மணி நேரமும் சிசிடிவி கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.