ஜவ்வாது மலையில் தங்க காசு புதையல்!

 
ச் ச்

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் அமைந்துள்ள சிவன் கோயில் கருவறையில் தங்கக்காசு புதையல் கிடைத்துள்ளது.

திருவண்ணாமலையில் உள்ள ஜவ்வாது மலை கோவிலூர் சிவன் கோவிலில் தங்கக்காசு புதையல் கிடைத்துள்ளது. கோவில் கருவறையில் 100க்கும் மேற்பட்ட சோழர் காலத்து தங்கக்காசுகள் கிடைத்ததால் மலைவாழ் மக்கள் பரவசமடைந்துள்ளனர். 3ம் ராஜ ராஜ சோழன் ஆட்சியில் கட்டப்பட்ட கோவில் கட்டுபான பணியின் போது இந்த புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தங்கக் காசுகளை அறநிலையத்துறை, வருவாய்துறை, தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 100 தங்கக் காசுகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.