இமாச்சலில் பெரும் சோகம்! டாடா சுமோ மீது உருண்டு விழுந்த ராட்சத பாறை... 13 பேர் பரிதாப பலி!

 
1

இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் கில்லார் - உதய்பூர் சாலையில் பங்கி பள்ளத்தாக்கு பகுதியில் 13 பேருடன் டாடா சுமோ வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது, மலையில் இருந்து உருண்டு வந்த பெரிய பாறை ஒன்று , சுமோ மீது மோதியது. இந்த சம்பவத்தில் வாகனத்தில் இருந்த13 பேரும் அங்கேயே உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து அங்கு சென்ற அதிகாரிகள் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். வாகனத்தில் சிக்கியுள்ள உடல்களை மீட்கவும், அந்த பாதையை சரி செய்யும் பணியிலும் தீவிரமாக உள்ளனர்.கில்லார்-உதய்பூர் சாலையானது, கரடுமுரடான மற்றும் நிலச்சரிவு அபாயம் நிறைந்த நிலப்பரப்பு பகுதியாகும். பருவமழைக் காலத்தில் பாறைச்சரிவுகளால் எளிதில் பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது. தற்போது ஹிமாச்சல் மாநிலத்தில் மழை பெய்வதற்கான மஞ்சள் நிற எச்சரிக்கையை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.