பணிச்சுமை- தீபாவளியன்று பணியிலிருந்த போக்குவரத்து காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு

 
death

திருச்சியில் தீபாவளியன்று பணியிலிருந்த போக்குவரத்து காவலர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Death

திருச்சி மாநகரம் ஸ்ரீரங்கம் போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் ராஜாராம்(58). 1988-ஆம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்துள்ளார். இவர் நேற்று வழக்கம் போல் பணிக்கு வந்துள்ளார். திருவானைக்காவல் அருகே பணியில் இருந்த போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவருடன் இருந்த சக காவலர் ராஜாராமை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராஜாராமிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது உடனடியாக வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பரிந்துரைத்துள்ளனர். 

அதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த காவலர் ராஜாராமிற்கு மஞ்சுளா என்கிற மனைவியும் மூன்று மகள்களும் உள்ளனர். தீபாவளி அன்று பணியில் இருந்த காவலர் மாரடைப்பால் உயிரிழந்தது சக காவலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.