முட்புதரில் வீசப்பட்ட பச்சிளங்குழந்தை! எறும்பு மொய்த்ததால் அலறிய சோகம்
பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தை ஏரியில் அடர்ந்த முட்புதரில் வீசப்பட்ட சம்பவம் செங்கல்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் பெருந்தண்டலம் ஊராட்சிக்கு உட்பட்ட பொதுப்பணித்துறை ஏரி உள்ளது. இந்த பகுதியில் தினந்தோறும் விவசாயிகள் தங்களது கால்நடைகளை மேய்த்து அவற்றிற்கு தண்ணீர் கொடுப்பது வழக்கம். இந்நிலையில் இன்று கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு அப்பகுதியில் உள்ள முட்புதரில் குழந்தை அழுகும் சத்தம் கேட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து ஏதோ குழந்தை அழுவது போல் சத்தம் கேட்கிறது என்று முட்பதறின் மேல் பகுதியில் பார்த்தபோது ஒரு கட்டைப்பையில் குழந்தையின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.
உடனடியாக கட்டைப் பையை புதரில் இருந்து வெளியே எடுத்துப் பார்த்தபோது அதில் பிறந்து சில மணி நேரங்களேயான ரத்தக்கரையுடன் கூடிய அழகிய ஆண் குழந்தை இருந்த்ள்ளது. அவற்றின் உடல்களில் ஆங்காங்கே எறும்புகள் கடித்தவாறு இருந்ததால் உடல் சிவந்த நிலையில் காணப்பட்டது. உடனடியாக செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்ததின் பேரில் 108 அவசர ஊர்தி காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் விரைந்து வந்து குழந்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தை பிரிவுக்கு அனுப்பி வைத்தனர். தற்போது குழந்தை நலமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். யாருடைய குழந்தை எதற்காக வீசப்பட்டது என்ற கோணத்தில் போலீசார் இப்பகுதிகளில் சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.