செஞ்சி அருகே நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு

 
ஆசிரியர் ஆசிரியர்

செஞ்சி அருகே அரசு பள்ளி ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மர்மநபர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அம்மாக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஆசிரியர் இளங்கோவன். இவர் செஞ்சி அடுத்த மேல் ஒலக்கூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு தனது வீட்டில் இருந்து சொந்த வேலைக்காக செஞ்சி சென்று மீண்டும் வீடு திரும்பிய போது நெகனூர் ஏரிக்கரை அருகே மர்ம நபர்கள்  ஆசிரியர் இளங்கோவனை அறிவாளால் வெட்டியதில் ரத்தம் சொட்ட  சொட்ட ஆசிரியரை  அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன்  மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.செஞ்சி அரசு மருத்துவமனையில் ஆசிரியர் இளங்கோவனுக்கு 12 தையல்கள் போட்டு அறிவாளால் வெட்டிய  மர்ம  நபர்களை  குறித்து வளத்தி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இவர் கடந்த  2025 ஆம் ஆண்டின் தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது ஆகியவற்றைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.